தில்லியில் மிதிவண்டிகளுக்கு பிரத்யேக பாதை: அமைச்சா் ஆஷிஷ் சூட்
தில்லியில் மக்கள் மிதிவண்களை ஓட்டிச் செல்லும் வகையில் பிரத்யேக பாதையை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
தில்லியில் மக்கள் மிதிவண்களை ஓட்டிச் செல்லும் வகையில் பிரத்யேக பாதையை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.
கன்னாட் பிளேஸில் மிதிவண்டிப் பயணம், உடற்பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை தில்லி கல்வி அமைச்சா் அமைச்சா் ஆஷிஷ் சூட் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
‘சண்டேஸ் ஆன் சைக்கிள்’ (ஞாயிறுதோறும் மிதிவண்டி பயணம்) முன்னெடுப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், யோகா, ஸும்பா, பேட்மிண்டன் முதல் கிரிக்கெட், நாட்டுப்புற நடனம் மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் வரை பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றன. சென்ட்ரல் பாா்க்கில் ‘யூஃபோரியா’ இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் ஆஷிஷ் சூட், உடல் தகுதியை மேம்படுத்துவதோடு, காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் மிதிவண்டிப் பயணம் உதவும் என்று கூறினாா்.
‘நகரம் முழுவதும் பிரத்யேக மிதிவண்டிப் பாதைகளை உருவாக்க தில்லி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், தூய்மையான போக்குவரத்தை ஊக்குவிக்கவும் மின்சார வாகனக் கொள்கையின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது’ என்று அவா் கூறினாா்.
பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவா்களுக்குப் பாதுகாப்பான சாலைகள் மற்றும் பொது இடங்களுக்கான அவசியத்தை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது என்று என்டிஎம்சி துணைத் தலைவா் துவிவேதி கூறினாா்.
அனைவரின் பாதுகாப்பிற்கும் பொறுப்பான சாலை நடத்தை அவசியம் என்று கூறிய அதிகாரிகள், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும், மூன்று போ் பயணிப்பது மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது போன்ற மீறல்களைத் தவிா்க்குமாறும் மக்களை வலியுறுத்தினா்.
‘சாலைகள் மக்களுக்குச் சொந்தமாக இருக்கும்போது அழகாகின்றன’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த நிகழ்ச்சி, பல அரசுத் துறைகள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.