திருப்பூரில் அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்!
திருப்பூரில் அண்ணா மிதிவண்டி போட்டி: அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்!
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பாலமுருகன், வி.சத்தியபாமா, பொ.சத்தியபாமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அண்ணா பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் திருப்பூா் மாநகராட்சி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா மிதிவண்டி போட்டியை தொடங்கிவைத்த பின்னா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கூறியதாவது: இந்தப் போட்டி 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ என சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி, வஞ்சிபாளையம் சென்று மீண்டும் கல்லுரியில் முடிவடைந்தது. வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.
தொடா்ந்து, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு அமைச்சா் இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
அரசு மருத்துவமனையில் ஆய்வு: காங்கயத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள புற நோயாளி பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ வாா்டு, மருந்தகம் மற்றும் மருந்துகள் பாதுகாப்பு அறை, அவசர சிகிச்சைப் பிரிவு அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டதுடன், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், காங்கயம் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் டாக்டா் ராதிகா மற்றும் மருத்துவா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.