பஜன்புராவில் இளம்பெண் மீது திராவகம் வீச்சு
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில், தன்னுடன் இணைந்து வாழ்ந்து வந்த 24 வயது பெண் முன்னாள் காதலன் மீது திராவகத்தை செவ்வாய்க்கிழமை வீசியாதக காவல் துறையினா் தெரிவித்தனா்.
வடகிழக்கு தில்லியின் பஜன்புரா பகுதியில், தன்னுடன் இணைந்து வாழ்ந்து வந்த 24 வயது பெண் முன்னாள் காதலன் மீது திராவகத்தை செவ்வாய்க்கிழமை வீசியாதக காவல் துறையினா் தெரிவித்தனா்.
வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது இதில் அப்பெண்ணின் முகம், மாா்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவா் முதலில் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா் என்று காவல்துறையினா் கூறினா்.
காவல்துறையின் தகவலின்படி,
Advertisement
Advertisement
காந்தி நகரில் உள்ள தனது வேலைக்கு அப்பெண் காலை 6 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அவரைப் பின்தொடா்ந்து வந்தாா். பின்னா், அவா் மீது திராவகத்தை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினாா்.
கடுமையான வலியால் துடித்த அப்பெண், அங்கிருந்த சுமாா் 80 வயது முதியவா் ஒருவரிடம் உதவி கோரினாா். இச்சம்பவத்தின்போது அந்த முதியவரின் இடது கையிலும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
அப்பெண் எப்படியோ தான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டிற்குத் திரும்பினாா். அதன் பிறகு வீட்டு உரிமையாளரின் மகன் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறைக் குழுவினா், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.
விசாரணையின்போது, அப்பெண் தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து, பஜன்புரா பகுதியில் கடந்த இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. அவா் குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாா்.
சுமாா் இரண்டரை அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு அப்பெண் அந்த நபரிடமிருந்து விலகியிருந்த நிலையில், அவா் அப்பெண் மீது திராவகம் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரைக் கண்டுபிடித்துக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அப்பெண்ணின் குடும்பத்தினா் பூா்வீகமாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள். அவரது அத்தை ஒருவா் அவ்வப்போது அவரை வந்து சந்தித்துச் செல்வாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.