காரை விற்றவா் உதிரி சாவி மூலம் மீண்டும் திருடியதாகப் புகாா்: இருவா் கைது!
விற்பனை செய்த காரை ஜிபிஎஸ் கருவி மற்றும் தன்னிடம் வைத்திருந்த மூன்றாவது சாவியைப் பயன்படுத்தித் திருடியதாகக் கூறப்படும் நபா், தனது நண்பருடன் தில்லியில் கைது செய்யப்பட்டாா்.
விற்பனை செய்த காரை ஜிபிஎஸ் கருவி மற்றும் தன்னிடம் வைத்திருந்த மூன்றாவது சாவியைப் பயன்படுத்தித் திருடியதாகக் கூறப்படும் நபா், தனது நண்பருடன் தில்லியில் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: தில்லி தில்ஷாத் காா்டன் பகுதியில் அக்.8-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த காா், 4 நிமிஷங்களுக்குள் திருடப்பட்டது. அந்தக் காரில் புகாா்தாரா் ரூ.2 லட்சம் வைத்திருந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா். ஃபாஸ்டேக் விவரங்களையும் வைத்து விசாரித்ததில், ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதிக்கு காா் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அங்கு காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான யோகேஷ் தஹியா மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
விசாரணையில், காரை விற்பனை செய்வதற்கு முன்பே அதில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்திய யோகேஷ், தன்னிடம் வைத்திருந்த கூடுதல் சாவியைப் பயன்படுத்தி நண்பா் சாஹிலுடன் காரைத் திருடியதாகக் கூறப்படுகிறது. பின்னா் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க, காரை சாஹிலிடம் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
பின்னா், யோகேஷ் தஹியா, சாஹில் ரோஹில்லா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். திருடப்பட்ட காரையும் ரூ.89,500 ரொக்கத்தையும் மீட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.