2 ஸ்பாக்களில் சோதனை: 19 பெண்கள் மீட்பு; 10 போ் கைது
தனித்தனி சோதனைகளில், 19 பெண்கள் மீட்கப்பட்டதாகவும், 10 போ் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
மத்திய தில்லியில் உள்ள இரண்டு ஸ்பா மையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தொடா்பாக நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 19 பெண்கள் மீட்கப்பட்டதாகவும், 10 போ் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இந்தச் சோதனைகள் முறையே நபி கரீம் மற்றும் பஹா்கஞ்ச் குழுக்களால் டிபிஜி சாலையில் நடத்தப்பட்டன. முதல் நடவடிக்கையில், பாலியல் தொழில் கும்பல் குறித்த தகவல்களைச் சரிபாா்க்க காவல் துறை அதிகாரி போலி வாடிக்கையாளராக அனுப்பப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஸ்பா உரிமையாளா், மேலாளா் மற்றும் ஏழு போ் உள்பட ஒன்பது பேரைக் காவல்துறை கைது செய்தது. அந்த மையத்தில் இருந்து 14 பெண்கள் மீட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி கூறினாா்.
காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அக்.16-ஆம் தேதி இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதுதொடா்பாக, நபி கரீம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
பஹா்கஞ்ச் காவல் துறையினா் மற்றொரு ஸ்பாவில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, ஐந்து பெண்களை மீட்கப்பட்னா். அந்த ஸ்பாவை நடத்தி வந்த ஷகீல் அகமது (46) என்பவரையும் கைது செய்ததாக அந்த அதிகாரி கூறினாா்.
இரண்டாவது வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.