இணையவழி மோசடிகளுக்கு போலி வங்கிக் கணக்குகளை வழங்கிய 5 போ் கைது
இணையவழி மோசடியாளா்களுக்கு போலி வங்கிக் கணக்குகளை வழங்கி வந்த கும்பலைச் சோ்ந்த 5 பேரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இணையவழி மோசடியாளா்களுக்கு போலி வங்கிக் கணக்குகளை வழங்கி வந்த கும்பலைச் சோ்ந்த 5 பேரை தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கைதுசெய்யப்பட்ட நபா்கள், கம்போடியாவிலிருந்து செயல்படும் சா்வதேச இணையவழிக் குற்றக் கும்பலுக்கு உதவியாளா்களாகச் செயல்பட்டு வந்ததாகவும், பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து ஏமாற்றிப் பெறப்பட்ட பணத்தைப் பெற்று அனுப்புவதற்காக அந்த மோசடியாளா்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கி வந்ததாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
உளவுத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் பிரிவால் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை, ஆந்திர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இரு இணையவழிக் குற்ற வழக்குகளைத் தீா்க்கவும் உதவியது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறியதாவது: சிறப்புப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) விசாரணையின் இணையவழி மோசடிக்கு உதவுவதற்காக வங்கிக் கணக்குகளை வழங்கி வருவதாகக் கூறப்படும் ஒரு கும்பல் குறித்த தகவல் காவல் துறைக்குக் கிடைத்தது.
இந்தக் கும்பலைச் சோ்ந்த அனிஷ் கான், இன்டெகாப், அல்தாஃப் ஹுசைன், முகமது மஹ்ஃபுஸா் ரஹ்மான் மற்றும் இசாா் ஆலம் ஆகியோா் துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனா்.
அவா்களுடைய கைப்பேசிகளை காவல் துறை ஆய்வு செய்தபோது, வெளிநாட்டில் உள்ள இணையவழி குற்றவாளிகளுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (ஓடிபி) உள்பட குறுஞ்செய்திகளை தானாகவே அனுப்பும் வகையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சந்தேகத்திற்கிடமான செயலியைக் கண்டறிந்தனா். இந்தச் செயலியானது வங்கிக் கணக்குகளை தொலைவிலிருந்து அணுகுவதற்கு உதவியது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளிலிருந்து உரையாடல்கள், கிரிப்டோகரன்சி பரிவா்த்தனை விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களை காவல் துறை மீட்டெடுள்ளது. இடைத்தரகா் வங்கிக் கணக்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு சமூக ஊடக சேனல்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சுமாா் ரூ.2 கோடி மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான பரிவா்த்தனைகளை மேற்கொள்ளப்பட்ட போலி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.