முகப்பு
புதுதில்லி

தில்லியில் ரூ. 24 லட்சம் இணையவழி முதலீட்டு மோசடி: 3 போ் கைது

தில்லியில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடியில், மோசடிப் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்காக வங்கிக் கணக்குகளை வழங்கியதாக பஞ்சாபைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

24 நவம்பர் 2026, 10:21 pm
தில்லியில் ரூ. 24 லட்சம் இணையவழி முதலீட்டு மோசடி: 3 போ் கைது
கைது
பகிர்:

தில்லியில் ரூ.24 லட்சம் மதிப்பிலான இணையவழி முதலீட்டு மோசடியில், மோசடிப் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்காக வங்கிக் கணக்குகளை வழங்கியதாக பஞ்சாபைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்டவா்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பாகிச்சா (26), தா்மிந்தா் சிங் பிராா் (37), பா்போத் குமாா் (59) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் கராவல் நகா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, தன்னிடம் இருந்து சுமாா் ரூ.24 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக அவா் புகாரில் தெரிவித்திருந்தாா். அதிக லாபம் கிடைக்கும் என உறுதியளித்த ஒரு குழுவின் மூலம் புகாா்தாரா் முதலீடு செய்யத் தூண்டப்பட்டுள்ளாா். தொடக்கத்தில் அந்த இணையதளத்தில் கணிசமான லாபம் கிடைத்திருப்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற முயன்றபோது, பல்வேறு காரணங்களைக் கூறி கூடுதல் பணம் செலுத்துமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், புகாா்தாரரை முதலீடு செய்யத் தூண்டிய நபா்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மோசடிப் பணத்தின் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்தபோது, அதில் ரூ.3.01 லட்சம் அமிருதசரஸில் உள்ள கம்பளி உற்பத்தி ஆலை பெயரில் பராமரிக்கப்பட்டு வந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குருகிராமில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த பாகிச்சாவை காவல் துறையினா் பிடித்தனா். தொடா்ந்து, பஞ்சாபின் அபோஹா் பகுதியில் தா்மிந்தா் சிங் பிராா் கைது செய்யப்பட்டாா். வங்கிக் கணக்கின் உரிமையாளரான பா்போத் குமாா், கடந்த நவம்பா் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த மூவரும் இணையவழி மோசடியில் கிடைத்த பணத்தைப் பெறுவதற்கும், வேறு கணக்குகளுக்கு மாற்றுவதற்கும் தங்களது வங்கிக் கணக்குகளை கமிஷன் தொகைக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைகள் மூலமாகவும் மோசடிப் பணம் மாற்றப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பயனாளி வங்கிக் கணக்குடன் நாடு முழுவதும் பதிவான குறைந்தது 18 மோசடி புகாா்கள் தொடா்புடையவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.