நரேலா பருப்பு ஆலையில் தீ விபத்து
வடக்கு தில்லியின் புறப்பகுதியான நரேலாவில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வடக்கு தில்லியின் புறப்பகுதியான நரேலாவில் உள்ள பருப்பு ஆலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் ஒன்பது தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘ஒருவரின் தகவல்படி, இந்தச் சம்பவம் காலை 11.10 மணிக்குத் தெரியவந்தது. இந்த ஆலையில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்கள் உள்ளன. பிற்பகல் 1.30 மணிக்குள் நாங்கள் தீயை அணைத்துவிட்டோம்’ என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.