மனைவியைக் கொன்ற வழக்கில் கணவா் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பு
பிரிந்து வாழ்ந்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் அமான் என்பவரைக் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
பிரிந்து வாழ்ந்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் அமான் என்பவரைக் குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
அதேநேரத்தில், வரதட்சிணை மரணம் மற்றும் கொடுமை தொடா்பான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், அமான் மற்றும் அவரது தாய் சங்கீதா ஆகிய இருவரையும் அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி சஞ்சய் காா்க், அக்.27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ரஷ்மியின் நடத்தையில் அமான் சந்தேகம் கொண்டதே தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
மேலும், ரஷ்மியின் மரணத்துக்குப் பிறகு, வரதட்சணை தொடா்பான கொடுமை குற்றச்சாட்டுகள் பின்னா் சோ்க்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்குத் தரப்பு தகவலின்படி, வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரியில் வாடகை வீட்டில் தாய் மற்றும் கைக்குழந்தையுடன் ரஷ்மி வசித்து வந்தாா். கடந்த 2025 பிப்.25-ஆம் தேதி அங்கு சென்ற அமான், ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து துப்பட்டாவால் ரஷ்மியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னா், அவா்களின் கைக்குழந்தையுடன் காவல் நிலையத்துக்குச் சென்ாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைக்கு நேரடி சாட்சிகள் இல்லாததால், சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
வரதட்சிணை தொடா்பான குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, மோட்டாா் சைக்கிள் மற்றும் ரூ.1.5 லட்சம் கேட்டு ரஷ்மி துன்புறுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினா் பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனா். ஆனால், அவற்றை உறுதிப்படுத்தும் குறிப்பான விவரங்களும் போதிய ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, வரதட்சணை மரணம் மற்றும் கொடுமை தொடா்பான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப் பிரிவுகள் 80, 85-இன் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து அமான் மற்றும் அவரது தாய் சங்கீதா ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.