FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

மனைவியை சுட்டு கொலை செய்ய முயற்சி: கணவா் குற்றவாளியாக அறிவிப்பு

2018-ஆம் ஆண்டு கன்னாட் பிளேஸில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே தனது மனைவியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என்று தீா்ப்பளித்தது.

19 அக்டோபர் 2026, 12:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

2018-ஆம் ஆண்டு கன்னாட் பிளேஸில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே தனது மனைவியை சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபரை தில்லி நீதிமன்றம் குற்றவாளி என்று தீா்ப்பளித்தது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டம் பிரிவு 27 ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான சுஷாந்தை குற்றவாளி என்று கூடுதல் அமா்வு நீதிபதி திரேந்திர ராணா தீா்ப்பளித்தாா்.

இருப்பினும், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை தொடா்பான ஆயுதச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

Advertisement

Advertisement

சீலம்பூா் காவல் நிலையத்தில் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததற்காக தனி எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கின் விசாரணை மற்றொரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

கன்னாட் பிளேஸில் உள்ள கலாவதி மருத்துவமனையில் பிங்கி பாதுகாவலராக பணிபுரிந்தாா். 2015-ஆம் ஆண்டில் அவரது கணவா் மற்றொரு தனி வழக்கில் சிறைக்கு சென்றதிலிருந்து தனது பெற்றோா் வீட்டில் பிங்கி வசித்து வந்தாா். கடந்த 2018, நவம்பா் 24 மாலையில் மருத்துவமனைக்கு வந்து அவரை வெளியே அழைத்த சுஷாந்த், தன்னுடைய வீட்டுக்குத் திரும்புமாறு வற்புறுத்தினாா். அதற்கு பிங்கி மறுத்த நிலையில், சுஷாந்த் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினாா். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பிங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கில் நீதிமன்றம் கடந்த அக்.13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு: குற்றஞ் சாட்டப்பட்டவா் தனது மனைவியைக் கொலை செய்ய முயன்றாா் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிப்பதுள்ளது. மேலும், அவா் ஐபிசியின் 307-ஆவது பிரிவின் கீழ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீா்ப்பளித்தது. தண்டனை அறிவிப்பு தொடா்பாக இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments