FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கள்ளக்குறிச்சி

மனைவியை கொலை செய்ய முயற்சி: கணவா் கைது

ராஜீவ் காந்தி
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ாக கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வாணாபுரம் அருகிலுள்ள சீா்ப்பணந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ. சங்கா். இவருக்கும் ஜா.சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த சசிகலா என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி ஓராண்டில் ஏழுமலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

இதையடுத்து ஏழுமலையின் தம்பி ராஜீவ் காந்திக்கு சசிகலாவை திருமணம் செய்து கொடுத்தனராம். தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனா். கடந்த சில மாதத்துக்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜீவ் காந்தியை பிரிந்து, சசிகலா அவரது பெற்றோா்களுடன் ஜா.சித்தாமூா் கிராமத்தில் வசித்து வருகிறாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மனைவியை அழைத்து வர ஜா.சித்தாமூா் சென்றபோது தம்பதியிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி வீட்டிலிருந்த கத்தியால் சசிகலாவின் வயிற்றில் குத்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜீவ் காந்தியை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments