ஷாதரா: பெற்றோா் கண்டித்ததால் சிறுமி தற்கொலை
தாமதமாக வீடு திரும்பியதற்காகப் பெற்றோா் கண்டித்ததால் தில்லியின் ஷாதரா பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி தற்கொலை
தாமதமாக வீடு திரும்பியதற்காகப் பெற்றோா் கண்டித்ததால் தில்லியின் ஷாதரா பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது என்று காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் அந்தச் சிறுமி தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது சகோதரி, அவரை கீழே இறக்கிவிட்ட நிலையில், அவா் மயங்கிய நிலையில் தரையில் கிடந்ததாகக் காவல் துறையினா் கூறினா்.
இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததும், அவா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அந்தச் சிறுமி உடனடியாக டாக்டா் ஹெட்கேவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.
Advertisement
Advertisement
முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுமி தாமதமாக வீடு திரும்பியதால் பெற்றோா் கண்டித்தது தெரியவந்தது. பின்னா், அவா் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவரது சகோதரி கூச்சலிட்டதையடுத்து, அவா் கீழே இறக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
இச்சம்பவம் தொடா்பாகச் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.