FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஊழல் தடுப்பு போலீஸôரின் சோதனை அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: சுரேஷ்ராஜன்

நாகர்கோவில், அக். 8: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôரின் சோதனை அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் திமுக அமைச்சர் என். சுரேஷ்ராஜன் கூறினார்.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

நாகர்கோவில், அக். 8: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôரின் சோதனை அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் திமுக அமைச்சர் என். சுரேஷ்ராஜன் கூறினார்.

 வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôர் சுரேஷ்ராஜனின் வீட்டில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது சுரேஷ்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

 கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 55 பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்து இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 இவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி வாய்ப்பைப் பறிக்கும் நோக்கத்திலும், எங்கள் தேர்தல் பணிகளை முடக்கும் வகையிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸôரை கொண்டு சோதனை நடத்துகிறது.

 அதிமுக ஆட்சியில் மக்கள் வாடுகிறார்கள். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுவதில்லை. 6 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

 மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் எங்கள் கட்சிப் பணிகளைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.

 எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை விட்டுவிட்டு வளர்ச்சிப் பணிகளில் அதிமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே என்மீது இரு வழக்குகளும், என் மனைவி மீது ஒரு வழக்கும் பதியப்பட்டுள்ளன.

 2003-ல் தொடங்கப்பட்ட மீன்வலை தொழில்

 நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர முறைகேடாக எதையும் சேர்க்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பே வருமானவரி கணக்கை முழுமையாக தாக்கல் செய்திருக்கிறேன்.

 போலீஸôரின் கடுமையான இச் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை. எத்தனை சோதனைகள் நடத்தினாலும் கழகப் பணிகளில் தொய்வு ஏற்படாது. கட்சிப் பணியில் தீவிரமாக செயல்படுவேன். சோதனை மூலம் எனது கட்சிப் பணிகளை முடக்கலாம் எனப் பகல் கனவு காண வேண்டாம். அதிமுக அரசின் இந் நடவடிக்கையைக் கண்டிக்கிறேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments