FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சிவந்திபுரத்தை கலக்கும் வேட்பாளர் தம்பதியர்!

அம்பாசமுத்திரம், அக். 8: அம்பாசமுத்திரம் ஒன்றியம், சிவந்திபுரம் ஊராட்சியில் தலைவர் பதவி, உறுப்பினர் பதவிக்கு கணவன், மனைவி சகிதமாக 4 தம்பதியினர் போட்டியிடுகின்றனர்.  அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் சிவந்த

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

அம்பாசமுத்திரம், அக். 8: அம்பாசமுத்திரம் ஒன்றியம், சிவந்திபுரம் ஊராட்சியில் தலைவர் பதவி, உறுப்பினர் பதவிக்கு கணவன், மனைவி சகிதமாக 4 தம்பதியினர் போட்டியிடுகின்றனர்.

 அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் சிவந்திபுரம் ஊராட்சி மன்றம் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி ஆகும். இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 10,250 பேர். இதில் ஆண்கள் 5098, பெண்கள் 5152. ஊராட்சித் தலைவர் பதவி பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு என். ரஞ்சிதம், எஸ். ஸ்டெல்லா, சே. ஜெயா, பி. ரேச்சல், எஸ். சியாளமாவதி, எம். பிச்சம்மாள், பி. ஜெமிமாபாக்கியம் ஆகிய 7 பேர் போட்டியிடுகின்றனர்.

 ஊராட்சியின் தற்போதையை தலைவர் பி. ரேச்சல். இவரது கணவர் பா. பிராங்க்ளின். வார்டு உறுப்பினர். இந்தத் தேர்தலில் ரேச்சல் தலைவர் பதவிக்கும், பிராங்க்ளின் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் எஸ். ஸ்டெல்லா தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது கணவர் ஏ. ஸ்டீபன்முத்தையா 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

Advertisement

Advertisement

 திமுக சார்பில் சே. ஜெயா தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது கணவர் எஸ். சேகர் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ச. சியாமளாவதி தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவரது கணவர்

 எம். சங்கரநாராயணன் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

 தலைவர் பதவிக்கு மனைவியும், உறுப்பினர் பதவிக்கு தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் கணவர்களும் போட்டியிடுகின்றனர். கணவன்,

 மனைவி சகிதமாக இந்தத் தம்பதி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments