டீ கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது
சாத்தான்குளம், அக். 8: நாசரேத்தில் டீ கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியைப் போலீஸôர் கைது செய்தனர். தங்கையாபுரத்தைச் சேர்ந்தவர் ராசையா (60). இவர் கடையனோடையில் டீ கடை நடத்தி வருகிறார
சாத்தான்குளம், அக். 8: நாசரேத்தில் டீ கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியைப் போலீஸôர் கைது செய்தனர்.
தங்கையாபுரத்தைச் சேர்ந்தவர் ராசையா (60). இவர் கடையனோடையில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கடையனோடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெ. மாணிக்கத்துக்கும் (46) வெள்ளிக்கிழமை மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராசையா ஊருக்குச் செல்வதற்காக நாசரேத் பஸ் நிலையத்தில் நின்றாராம். அப்போது அங்கு வந்த மாணிக்கம், அவரை தகாத வார்த்தையில் பேசி அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த ராசையா ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இது குறித்து, நாசரேத் போலீஸôர் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.