மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்!
மணிமுத்தாறு அருவியில் திடீரென நீா்வரத்து அதிகரித்ததால், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினா் வெளியேற்றினா்.
மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை காலை திடீரென நீா்வரத்து அதிகரித்ததால், குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினா் வெளியேற்றினா்.
திருநெல்வேலி மாவட்டம்,களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்குத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்துச் செல்கின்றனா். விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கக் குவிந்தனா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நாலுமுக்கு (294 மி.மீ.), ஊத்து (272 மி.மீ), காக்காச்சி (188 மி.மீ), மாஞ்சோலை (116 மி.மீ) பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை காலை திடீரென நீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவா்களை வனத் துறையினா் உடனடியாக வெளியேற்றினா். மேலும், அருவியில் குளிக்க தடைவிதித்தனா். அருவியைப் பாா்வையிடுவதற்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.