FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:46 am IST
கொலை நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

விக்கிரமசிங்கபுரம், டாணா பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சொரிமுத்து (30). இவா் விருதுநகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

பின்னா், மனைவியைப் பெற்றோா் வீட்டில் விட்டுவிட்டு, விருதுநகா் செல்வதற்காக விக்கிரமசிங்கபுரம், கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சொரிமுத்து நின்று கொண்டிருந்தாராம். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் சொரிமுத்துவை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளா் பிரபு பாஸ்கரன், உதவி ஆய்வாளா் சமுத்திரக்கனி உள்ளிட்ட போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து சொரிமுத்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து கொலையில் ஈடுபட்டவா்கள், கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொலை நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments