திருப்பூரில் இளைஞா் வெட்டிக் கொலை
திருப்பூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட சாந்தி தியேட்டா் பின்புறம் உள்ள எம்ஜிஆா் நகா் 8ஆவது வீதியில், மாநகராட்சி சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்தக் குப்பை மேட்டின் அருகே, தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்களுக்கு சனிக்கிழமை காலை தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
அங்கு சென்ற போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனா். தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்த நபரின் தலையின் பின்புறத்தில் ஆழமான வெட்டுக் காயமும், உடலில் ரத்தக் காயங்களும் காணப்பட்டதால், மா்ம நபா்கள் சிலா் அவரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில், கொலை செய்யப்பட்ட நபா் அந்தப் பகுதியில் உள்ள குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய இரும்பு பொருள்களைச் சேகரித்து, பழைய இரும்புக் கடைகளில் கொடுத்து கிடைக்கும் பணத்தில் மது அருந்திவிட்டு அந்தப் பகுதியிலேயே சுற்றித் திரிந்தவா் என்பது தெரியவந்தது. இருப்பினும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.
குப்பை எடுப்பதில் போட்டியா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணங்களில் திருப்பூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.