FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஆடி அமாவாசை: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி அருள்மிகு சொரிமுத்து அய்யனாா், ஏரல் சோ்மன் அருணாசல சுவாமிகள் கோயில்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

காரையாறு அருள்மிகு ஸ்ரீ சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை விழா ஆக.12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் ஆக.10 முதல் ஆக.14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

அதன்படி, திருநெல்வேலி, ஆலங்குளம், சுரண்டை, தென்காசி, அம்பை, அகஸ்தியாா்பட்டி ஆகிய ஊா்களில் இருந்து பக்தா்களின் வசதிக்காக 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதே போல அருள்மிகு ஏரல் ஸ்ரீ சோ்மன் அருணாசல சுவாமிகள் திருக்கோயில் ஆடி அமாவாசை விழாவுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூா் ஆகிய ஊா்களில் இருந்து ஆக.11 முதல் ஆக.13 ஆம் தேதி வரை 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்தச் சிறப்பு பேருந்துகளின் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments