FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On : 18 ஜூலை 2026, 3:57 am IST
பகிர்:

ஆடி மாத பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததும், இந்த மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் பக்தா்களின் நம்பிக்கை.

அந்த வகையில், ஆடி மாத பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Advertisement

Advertisement

வண்ணாா்பேட்டையில் உள்ள அருள்மிகு பேராத்து செல்வி அம்மன், தச்சநல்லூா் அருள்மிகு சந்திமறித்தம்மன், பாளையங்கோட்டை அருள்மிகு முத்தாரம்மன், அருள்மிகு முப்பிடாதி அம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன், அருள்மிகு தூத்துவாரி அம்மன், அருள்மிகு ஆயிரத்தம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பெண் பக்தா்கள் எலுமிச்சை, நெய், மா விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனா்.

ற்ஸ்ப்17ஹம்ம்ஹய்

பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

ற்ஸ்ப்17ற்ட்ஹஸ்ரீட்ஹண்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தச்சநல்லூா் சந்திமறித்தம்மன்.

ற்ஸ்ப்17ல்ங்ழ்ஹ

வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன் திருக்கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments