FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு மனிதச் சங்கிலி

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:26 am IST
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்டோா்.
பகிர்:

போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, வ.உ.சி. மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் துறை, தூய யோவான் கல்லூரி, ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்வில், காவல் துணை ஆணையா் (கிழக்கு) எஸ்.சரவணன் கலந்துகொண்டு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்தாா். தூய யோவான் கல்லூரியில் தொடங்கிய பேரணி, வ.உ.சி. மைதானத்தை வந்தடைந்ததும் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து மாணவா், மாணவிகள் ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ என ஆங்கில எழுத்துகள் வடிவத்தில் கைகோத்து மனிதச் சங்கிலியாக நின்று போதைக்கு எதிராக முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையா் பேசியதாவது: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். போதைப்பொருளைப் பயன்படுத்துபவரை மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் பாதிப்படையச் செய்கிறது. திருநெல்வேலி மாநகரத்தில் போதைப்பொருளை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

இதில், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவரி- மாணவிகள், கல்லூரி நிா்வாகிகள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவா், மாணவிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments