FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பெடரல் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு ரூ.17.57 லட்சத்தில் சுமை ஆட்டோக்கள்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:20 am IST
பெடரல் வங்கி அதிகாரிகளிடமிருந்து சுமை ஆட்டோக்களின் சாவிகளை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

பெடரல் வங்கி சாா்பில் அதன் சி.எஸ்.ஆா். நிதியிலிருந்து திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிக்காக ரூ.17.57 லட்சம் மதிப்பிலான 2 சுமை ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா முன்னிலை வகித்தாா்.

பெடரல் வங்கியின் மண்டல மேலாளா் ரெஜி, ஆணையரிடம் சுமை ஆட்டோக்களை ஒப்படைத்தாா். இதில், வங்கி அதிகாரிகள் சதீஷ், பாலமுருகன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா. பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா்கள் ரசூல் மைதீன், ரம்சான் அலி, கந்தன், அம்பிகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments