FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன்கள்: ரிசர்வ் வங்கி

இந்திய குடும்பங்கள் கடன் தேவை அதிகரிப்பு குறித்து...

Updated On : 11 ஜூலை 2026, 11:37 am IST
இந்திய குடும்பங்களில் அதிகரிக்கும் கடன்கள் - பிரதிப் படம்
பகிர்:

இந்திய குடும்பங்கள் கடன் தேவை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நிதி நிலைத்தன்மை அறிக்கையின்படி, 2025 - 2026 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் அளவானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் (GDP) 45.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தோராயமாக ரூ. 161 லட்சம் கோடி.

வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட சில்லறைக் கடன்களின் தேவை அதிகரிப்பே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதுவே கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவாகும்.

Advertisement

Advertisement

இந்திய குடும்பங்களின் மொத்த கடனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 45.5 சதவிகிதத்துடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 87.3 சதவிகிதத்துடன் தாய்லாந்து முதலிடத்திலும், 69.9 சதவிகிதத்துடன் மலேசியா இரண்டாமிடத்திலும், 59 சதவிகிதத்துடன் சீனா மூன்றாமிடத்திலும் உள்ளன.

இந்திய குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்தபோதிலும், கடன் பெற்ற்வர்கள் திருப்பிச் செலுத்தும் திறனும் தொடர்ந்து மேம்பட்டு வருவதாக அறிக்கையில் கூறுகிறது.

summary

India’s household debt is at 45.5% of GDP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments