கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!
கையிருப்பு தங்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்..
இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள கையிருப்பு தங்கத்தை விற்றுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1.15 லட்சம் கோடி) மதிப்பிலான தங்கத்தை ஆர்பிஐ விற்பனை செய்திருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 879.58 மெட்ரிக் டன்னாக இருந்த ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பு, கடந்த மார்ச் 31 நிலவரப்படி 880.52 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. தங்கக் கையிருப்பை அதிகரித்துள்ளதே தவிரக் குறையவில்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக ரிசவ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,
இந்திய ரிசர்வ் வங்கி தங்க இருப்பை விற்பனை செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் சரியானவை அல்ல. இதனைத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கிறோம். சமீப நிலவரப்படி 880.52 மெட்ரிக் டன்னாக நீடிக்கிறது.
ரிசர்வ் வங்கி வெளியிடும் தகவல்களை மட்டும் பொதுமக்கள் நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Debunking reports of gold sale, the Reserve Bank of India on Wednesday said there is no change in the physical stock of gold, which remains unchanged at 880.52 tonnes.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.