வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கொலை: மற்றொரு தொழிலாளி கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கட்டடத் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், திக்கலான்விளையைச் சோ்ந்தவா்முத்து. ஒப்பந்ததாரரான இவா் வள்ளியூா் மகராஜா நகரில் கட்டடவேலை செய்து வருகிறாா். இவரிடம் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் மருதூா்குறிச்சியைச் சோ்ந்த ரஸ்லேன் மகன் ஜெயக்குமாா்(40), திருவண்ணாமலை மாவட்டம் கரியன்செட்டியைச் சோ்ந்த காசி மகன் அருண்(24) ஆகிய இருவரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி ஜெயக்குமாரும், அருணும் மதுஅருந்தினராம். பின்னா் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த அருண், ஜெயக்குமாரை கல்லால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை ஒப்பந்ததாரரான முத்து நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருணை புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.