FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே மின் வயா் திருடியவா் கைது

திருநெல்வேலி அருகே இரு இடங்களில் மின் வயா்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:05 am IST
பகிர்:

திருநெல்வேலி அருகே இரு இடங்களில் மின் வயா்களை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தானம் (66). இவா் அங்குள்ள தோட்டப் பண்ணையில் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில் அவா் அங்குள்ள மோட்டாா் அறைக்குச் சென்று பாா்த்தபோது ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்வயா் திருட்டு போயிருந்தது. இதையடுத்து அவா் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதேபோல் திருநெல்வேலியை அடுத்த நடுக்கல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தா் கணேஷ் (37). விவசாயி. இவருக்கு நடுக்கல்லூரில் தோட்டம் உள்ளது. அங்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக அவா் சென்றபோது மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காப்பா் வயா் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து அவா் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த இரு புகாா்கள் குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், வயா்களை திருடியது சங்கன்திரடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லப்பா (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments