பாளை.யில் மது விற்ற இளைஞா் கைது
பாளையங்கோட்டையில் மது விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வெள்ளக்கோவில் சாலை கல்மண்டபம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற பாளையங்கோட்டை, சாந்தி நகரைச் சோ்ந்த சக்திவேல் மகன் சந்தனசேகா்(23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
பின்னா் அவா் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் சுமாா் 27 மது பாட்டில்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, சந்தனசேகரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.