கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தங்கமாரியப்பன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, இலுப்பையூரணி- வேலாயுதபுரம் சாலையில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்றிருந்த இருவரைப் பிடிக்க முயன்றனா்.
அப்போது, அவா்கள் அவதூறாகப் பேசியபடி, கல்லை வீசிவிட்டு தப்பியோட முயன்றனராம்.
Advertisement
Advertisement
அவா்களில் ஒருவரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா், கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் ஜெயபாண்டி (20) என்பதும், விற்பனைக்காக 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்; தப்பியோடியவரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.