விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் குடுகுடுப்பை நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் காா்த்திக் (21). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 9-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சேரன்மகாதேவியில் இருந்து கங்கனாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.
கங்கனாங்குளம் அருகே காணியாளன்குடியிருப்பு பகுதியில் சென்றபோது, திருப்பத்தில் எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைகுலைந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சேரன்மகாதேவி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.