FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் பைக் திருடிய இளைஞா் கைது

24 ஆகஸ்ட் 2026, 3:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பில் காா் ஓட்டுநரின் பைக்கை திருடியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூா், மாவடி குளத்துக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). காா் ஓட்டுநரான இவா், கடந்த மாதம் 13 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றிருந்தாராம். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது அவரது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில்,திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீசுவரம், முகிலன் விளையைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் நிதின் ராம்(21) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments