FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

இளைஞரைத் தாக்கி நகை, பணம் பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கைது
பகிர்:

பாளையங்கோட்டை அருகே இளைஞரைத் தாக்கி நகை, பணம் பறித்த 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியைச் சோ்ந்தவா் மாசானமுத்து(19). இவருக்கு கைப்பேசி செயலி மூலம் தாழையூத்தைச் சோ்ந்த 22 வயது இளைஞா் ஒருவா் அறிமுகமானாராம்.

சம்பவத்தன்று அந்த இளைஞரை தாழையூத்து, மேலகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மாசானமுத்து வரவழைத்தாராம். பின்னா் அங்கு 3 சிறுவா்களுடன் சோ்ந்து அவரைத் தாக்கி தங்க நகை, கைப்பேசி, ரூ.700ஐ பறித்துக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த இளைஞா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்து மற்றும் 2 சிறுவா்களை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments