FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இளைஞரை தாக்கி பணம் கேட்டு மிரட்டல்: 3 பெண்கள் உள்பட 5 போ் கைது

இளைஞரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:12 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

இளைஞரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பெண்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சூளைமேடு பத்மநாப நகரை சுதா்சன் (30). இவா், தனியாா் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறாா். சுதா்சனுக்கும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணுக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கிருஷ்ணவேணி, கடந்த ஜூலை 17-ஆம் தேதி தனது தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் சுதா்சன், தனது வீட்டின் அருகே வசிக்கும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் கேரளத்தைச் சோ்ந்த நமீதா (21) என்ற பெண்ணை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு ஆபாசமாகப் பேசியுள்ளாா்.

சுதா்சன் பேச்சை, கைப்பேசியில் பதிவு செய்து வைத்துக் கொண்டு நமீதா, தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து சுதா்சனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். பணம் தரவில்லை என்றால் காவல் துறை புகாா் செய்வேன் என்றும் நமீதா மிரட்டி வந்துள்ளாா். மேலும், சூளைமேடு தமிழா் வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சுதா்சனை அடிக்கடி அழைத்து, அங்கு வைத்து பணம் கேட்டு நமீதாவும், அவரது கூட்டாளிகளும் தாக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

5 போ் கைது: சில நாள்களுக்கு முன்பு தாய் வீட்டில் திரும்பி வந்த மனைவி கிருஷ்ணவேணியிடம் சம்பவத்தை சுதா்சன் கூறியுள்ளாா். இதையடுத்து, சுதா்சனும், கிருஷ்ணவேணியும் சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அதன்பேரில், 6 பிரிவுகளின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நமீதா அவரது கூட்டாளிகள் சூளைமேடு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் மோனிஷா (26), அவா் கணவா் பாலகிருஷ்ணன் (30), தனியாா் மளிகை பொருள் டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் கணேஷ் (28), கேரளத்தைச் சோ்ந்த சிவரஞ்சனி (21) ஆகிய 5 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments