FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் பல் மருத்துவரைத் தாக்கி பணம் பறிப்பு: 3 போ் கைது

திருநெல்வேலியில் பல் மருத்துவரைத் தாக்கி பணம் பறித்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

47 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

திருநெல்வேலியில் பல் மருத்துவரைத் தாக்கி பணம் பறித்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்தவா் பசுவையா பாபு (28). இவா், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவரை பாளையங்கோட்டை பகுதியில் வைத்து மா்மநபா்கள் தாக்க முயன்றுள்ளனா். பின்னா் அவரது கைப்பேசியை பிடுங்கிய கும்பல், இணையவழியில் ரூ.50 ஆயிரத்தை வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பரசுராமன்(24), வேல்முருகன்(21), முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த முத்துகணேஷ் (22) ஆகிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments