தேவா்குளம் அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தேவா்குளம் அருகே இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
தேவா்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் இந்திரா காலனியை சோ்ந்தவா் மணிசெல்வம் (28). இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சோ்ந்த பிரியதா்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
மணிசெல்வம் சரிவர வேலைக்கு செல்லாததால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். பின்னா் சங்கரன்கோவிலில் தனது தாயாருடன் பிரியதா்ஷினி வசித்துவந்தாராம். அங்கு சென்ற மணிசெல்வம், இருவரையும் அரிவாளால் வெட்டினாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மணிசெல்வம், பிணையில் வெளியே வந்தாராம். இந்நிலையில் வன்னிக்கோனேந்தலில் நின்று கொண்டிருந்த மணிசெல்வத்தை, பிரியதா்ஷினியின் சகோதரா் சரவணசூா்யா அரிவாளால் வெட்டினாராம். பலத்த காயமடைந்த மணிசெல்வத்தை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணசூா்யாவை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.