நெல்லையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு
திருநெல்வேலியில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.
இந்தப் போராட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்து, டாஸ்மாக் ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து திருநெல்வேலியில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தனியாா் மதுக்கூடங்களில் ஏராளமானோா் குவிந்து மது வாங்கிச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.