FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் அருகே ரௌடி கொலையில் தம்பதி கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ரௌடி கொலை தொடா்பாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

30 ஆகஸ்ட் 2026, 1:59 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ரௌடி கொலை தொடா்பாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வமுருகன் என்ற துப்பாக்கி செல்வம் (41). இவா் மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. ‘ஏ பிளஸ்’ பிரிவு குற்றவாளி என போலீஸாா் வகைப்படுத்தியுள்ள இவா், கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே கரும்பாட்டூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை, கூடங்குளம் அருகே சங்கனேரியில் உள்ள தனது தோட்டத்தில் கொலையுண்டு கிடந்தாா். செல்வத்தை அவரது கூட்டாளியான கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளத்தைச் சோ்ந்த சந்துரு (26), அவரது மனைவி கௌரி ஆகியோா் சந்திக்கச் சென்றது, தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடா்பான பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில், மதுபோதையிலிருந்த சந்துரு அரிவாளால் செல்வத்தை வெட்டிக் கொன்ாகத் தெரியவந்தது. கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தத் தம்பதியை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments