FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தேவா்குளம் அருகே கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
கைது
பகிர்:

தேவா்குளம் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வன்னிக்கோனேந்தல் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தென்காசி மாவட்டம், புளியங்குடி, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த சரவணதாஸ் (19) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் 260 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சரவணதாஸை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments