ராதாபுரம் அருகே 900 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை போலீஸாா் கைப்பற்றி, இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை போலீஸாா் கைப்பற்றி, இதில் தொடா்புடைய நபரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் இடிந்தகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அங்குள்ள வடக்கு தெருவில் அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணி சேவியா் கவாஸ்கா்(42) என்பவா் தனது வீட்டருகில் அமைத்திருந்த கொட்டகையில் 900 லிட்டா் வெள்ளை நிற மண்ணெண்ணெய் அடங்கிய 30 கேன்களை கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
விசாரணையில், மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய்யை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக அவா் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.