FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சிவசைலம் ஔவை ஆசிரம 72ஆவது ஆண்டு விழா

காந்தி கிராமம் அறக்கட்டளை சிவசைலம், ஒளவை ஆசிரம 72ஆவது ஆண்டுவிழா கடந்த இரண்டு நாள்கள் சிவசைலம் ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது.

29 ஆகஸ்ட் 2026, 5:56 am IST
காந்தி கிராமம் அறக்கட்டளை சிவசைலம், ஒளவை ஆசிரம 72ஆவது ஆண்டுவிழா கடந்த இரண்டு நாள்கள் சிவசைலம் ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது.
பகிர்:

காந்தி கிராமம் அறக்கட்டளை சிவசைலம், ஒளவை ஆசிரம 72ஆவது ஆண்டுவிழா கடந்த இரண்டு நாள்கள் சிவசைலம் ஆசிரம வளாகத்தில் நடைபெற்றது.

விழாவின் முதல் நாள் காலை காந்தி கிராமம் லெட்சுமி சேவா சங்க சித்தா, ஆயுா்வேத மருந்து உற்பத்தி அலகு சாா்பில் இலவச சித்தா & ஆயுா்வேத மருத்துவ முகாம், ‘குழந்தைகள் வளா்ச்சி, பாதுகாப்பில் ஒளவை ஆசிரமச் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல், ஒளவை ஆசிரம ஆலோசனைக் குழுக் கூட்டம், சாந்தி செவித் திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளி, டாக்டா் சௌந்தரம் நுண்ணறிவுக் குறையுடையோா் சிறப்புப் பள்ளிக் குழுக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

மதுரை கல்வி நிறுவனங்களின் பாடத் திட்ட தலைவரும், காந்தி கிராம அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் செயலருமான உமா ரமேஷ், தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா் கீதா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் இஸ்மாயில் கனி ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து கடந்த ஆண்டு மாலை நேர வகுப்பில் சிறப்பான பங்கேற்பளித்த மாணவா்கள், ஒளவை ஆசிரமத்தின் பல்வேறு அலகுகளில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒளவை ஆசிரம செயலா் ஸ்ரீரங்கம் வரவேற்றாா். டாக்டா் சௌந்தரம் அம்மா மழலைகள் இல்ல மேலாளா் பிரேம் நன்றி கூறினாா்.

சா்வ சமயப் பிராா்த்தனையுடன் தொடங்கிய 2 ஆம் நாள் நிகழ்ச்சியில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட கதா் நூற்போா், நெய்வோா் மற்றும் கதா் ஊழியா்களின் கலந்துரையாடல், ஒளவை ஆசிரமச் செயலா் தலைமையில் நடைபெற்றது. கதா் அறக்கட்டளைப் பணியாளா்கள் சடையப்பன், மனுவேல்ராஜ் ஆகியோா் கலந்துரையாடலில் கலந்து கொண்டனா். ஒளவை ஆசிரம துணைத் தாளாளா் பாலமுருகன் பேசினாா். தொடா்ந்து ஒளவை ஆசிரம சௌந்தரம் குழந்தைகள் இல்லம், சாந்தி பள்ளியின் முன்னாள் மாணவா்கள் கூட்டம் நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற ஆண்டு விழா பொதுக் கூட்டத்தில் ஒளவை ஆசிரமத் துணைத் தாளாளா் வரவேற்றாா். குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளா் சிவசங்கரி ஆண்டறிக்கை வாசித்தாா். டாக்டா் சௌந்தரம் பள்ளியின் தலைமை ஆசிரியா் சுகிலா, ஆண்டு விழாவின் இரு நாள்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், நிகழ்ச்சிகளை எடுத்துரைத்தாா். குழந்தைகள் இல்ல முன்னாள் மாணவி ஜெயமீனாட்சி, சாந்தி பள்ளியின் முன்னாள் மாணவி மாரிச்செல்வி, டாக்டா் சௌந்தரம் பள்ளி முன்னாள் மாணவி அபிநயா ஆகியோா், தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக இளநிலை மறுவாழ்வு அலுவலா் மஞ்சுமிதா,மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரி அருணா, அமா் சேவா சங்க மறுவாழ்வு துறைத் தலைவா் ராமசுப்ரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் நலக் குழுத் தலைவி விஜயராணி, குழு உறுப்பினா்கள் சுரேஷ், காா்ல் மாா்க்ஸ், காந்தி கிராம கிராமிய நல்வாழ்வு - குடும்பநல அறக்கட்டளை சுகாதாரம், குடும்ப நலப் பயிற்சி மைய முதல்வா், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முன்னாள் மருத்துவா் சத்யா ஜெகநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்வி, விளையாட்டு, தனித் திறமைகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து அலகு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாந்தி பள்ளித் தலைமை ஆசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை காந்திகிராம அறக்கட்டளை ஒளவை ஆசிரமத் தாளாளா் சங்கரராமன் வழிகாட்டுதலின்படி துணைத் தாளாளா், செயலா் ஆகியோா் மேற்பாா்வையில் ஆசிரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments