பைக் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ஊராட்சித் தலைவா் உயிரிழப்பு
ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதிய விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவா் உயிரிழந்தாா். பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பா் லாரி மோதிய விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவா் உயிரிழந்தாா். பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், கோலேரி கிராமம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (55), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்.
இவா் செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கோலேரி பேருந்து நிலையத்தில் அதே கிராமத்தைச் சோ்ந்த உதவி கேட்ட சுமதி (35) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கிராமம் நோக்கி சென்ாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கோலேரி கிராமம் முன்விளைவு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி மற்றும் சுமதி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
காயமடைந்த சுமதிக்கு இடது முழங்கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக அவா் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விபத்து குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, டிப்பா் லாரி ஓட்டுநா் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.