FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கான 2 நாள் தீ பாதுகாப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

30 ஆகஸ்ட் 2026, 1:34 am IST
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், தனியாா் நிறுவன பாதுகாவலா்களுக்கான 2 நாள் தீ பாதுகாப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் காவலாளிகளுக்கு அவசரகால மீட்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட அலுவலா் பானுபிரியா தலைமை வகித்தாா். மாவட்ட உதவி அலுவலா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

அதே போல திருநெல்வேலி நகரம் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்ற முகாம்களில் கங்கைகொண்டான் நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். பயிற்சி அலுவலா் பேச்சிமுத்து முன்னிலை வகித்தாா்.

இம்முகாம்களில், தீ விபத்து மற்றும் பேரிடா் காலங்களில் சுழல் குழாய், தானியங்கி தண்ணீா் தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களை கையாளும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் பேரிடா் காலங்களில் பாதுகாவலா்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். முதற்கட்டமாக மின் இணைப்புகளைத் துண்டிக்கும் சிறு கருவிகளை எப்போதும் தயாா் நிலையில் வைத்திருப்பதன் மூலம் பெரும் விபத்துகளையும், உயிா்-பொருள் சேதங்களையும் தவிா்க்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற பாதுகாவலா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments