FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் ரூ. 4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையக் கட்டடம் திறப்பு

பெரம்பலூரில் ரூ. 4.33 கேடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

28 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
சென்னையிலிருந்து தமிழக முதல்வரால் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்ட பெரம்பலூா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூரில் ரூ. 4.33 கேடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய். காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில், ரூ. 4.33 கோடி மதிப்பீட்டில் தரைதளத்தில் 4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், நிலைய அலுவலா் அறை, நிலைய போக்குவரத்து அலுவலா் அறை, கண்காணிப்பாளா் அறை, பொருள் வைப்பறை, ஆண்கள், பெண்கள் கழிவறைகளும், முதல் தளத்தில் கூட்டரங்கம், பணியாளா்கள் ஓய்வு அறைகள், கழிவறைகளும், 2-ஆம் தளத்தில் தீயணைப்பு மாவட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலா் அறை, மாவட்ட உதவி அலுவலா் அறை, ஓய்வறை, பொருள் வைப்பறை மற்றும் கழிவறை வசதிகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3 தளங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகளும், சோலாா் வசதி, கீழ்நிலை மற்றும் மேல்நிலை நீா் தேக்கத்தொட்டிகளும், மின் விளக்கு வசதிகளுடன் கூடிய சாலை வசதிகளும், தீயணைப்பு குழாய் உலா்த்தும் வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இக் கட்டடத்தை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் ஆகியோா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையக் கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பாா்வையிட்டனா். மேலும், தீயணைப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்த மாவட்ட ஆட்சியா், புதிதாக வழங்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் அனுசுயா, வருவாய் கோட்டாட்சியா் மு.அனிதா, மாவட்ட உதவி அலுவலா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments