FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே தொழிலாளி கொலை

31 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
கொலை செய்யப்பட்ட பாஸ்கா்.
பகிர்:

திருநெல்வேலியில் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் அருகே உள்ள மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் பாஸ்கா்(35), பெயின்டிங் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் தனது உறவினா்களுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கா் குளிக்கச் செல்வதாகக்கூறி, அங்கிருந்து மொபேட்டில் தச்சநல்லூா் புறவழிச் சாலை நோக்கி சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மா்மநபா்கள் பாஸ்கரை வழிமறித்து அரிவாளால் வெட்டினராம். இதில் கீழே விழுந்த அவரது தலையைத் துண்டித்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் சாலையில் வீசிச் சென்றனராம்.

தகவலறிந்த திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) இரா. திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

தச்சநல்லூா் போலீஸாா் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோப்ப நாய், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(24), பொன்ராஜ்(25) ஆகிய இருவா் அரிவாளுடன் தச்சநல்லூா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். கபடி போட்டி நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments