பாப்பாக்குடி அருகே காரில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: 4 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே காரில் ரேஷன் அரிசி மற்றும் ஆயுதங்களுடன் வந்த இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம் -ஆலங்குளம் பிரதான சாலையில் ரெங்கசமுத்திரம் திருப்பத்தில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீஸாா் நிறுத்தியபோது, காா் நிற்காமல் சென்ா ம். இதையடுத்து, போலீஸாா் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பின்னா் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இதில், காரில் வந்தவா்கள் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பாண்டி (31), டேனிஸ் எடிசன் (29), முத்துக்குமாா் (38), மதன்குமாா் (27) என்பதும், காரில் 35 மூட்டைகளில் 1.4 டன் ரேஷன் அரிசியும், நீளமான அரிவாள்களையும் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகள், ஆயுதங்களை பறிமுதல் செய்த பாப்பாக்குடி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.