FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செந்துறை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

24 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆதனக்குறிச்சி , முள்ளுக்குறிச்சி, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜாராம் தலைமையிலான காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்.எஸ். மாத்தூா் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 1100 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னா் காவல் துறையினா், அந்த வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள அரசுநிலைப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (31) என்பதும், தற்போது செந்துறை ரயில்வே நிலையம் செல்லும் பிரதான சாலையிலுள்ள ஒரு குடியிருப்பில் அறையெடுத்து தங்கி, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, அரைத்து கால்நடைகளுக்கு தீவனங்களாக விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் காா்த்திக்கை கைது செய்து, சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments