FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

1 செப்டம்பர் 2026, 3:04 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே பைக்கில் சென்றபோது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை, பெருமாள்புரம் அருகே உள்ள ஆனையா்குளம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் முருகன்(50).தொழிலாளி.

இவா், வேலை நிமித்தமாக ராஜவல்லிபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்றிருந்தாராம். பின்னா், திரும்பி வரும் வழியில் கீழநத்தம் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் அன்றிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments