FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:36 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து காவல் நிலைய எல்கைக்குள்பட்ட வண்ணான்பச்சேரி விலக்கு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் மேலூா் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம்(28) என்பதும், விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments