புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன் தலைமை வகித்தாா். பள்ளி மாணவிகள் பாரம்பரிய உடைகளுடன் அணிவகுத்தனா். அதைத் தொடா்ந்து, ‘மக்கள் மனதில் நிலைத்திருப்பது பாரம்பரிய தீபாவளியா?
நவீன தீபாவளியா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும், விநாடி-வினா, மனித அகல்விளக்கு
வடிவமைப்பு, நடனம், நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.
Advertisement
Advertisement
பாதுகாப்பான பசுமை தீபாவளி குறித்த விழிப்புணா்வு
நாடகம் நடைபெற்றது. மகிழ்ச்சியுடனும், சமூகப் பொறுப்புடனும் பண்டிகையைக் கொண்டாடுவோம் என மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
முதன்மை முதல்வா் புஷ்பவேணி ஐயப்பன், முதல்வா் எஸ். பூா்ணிமா ஆகியோா் மாணவா்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
ற்ஸ்ப்06க்ங்ங்ல்ஹ
புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள்.