சாத்தான்குளம் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் தீபாவளி விழா
சாத்தான்குளம் மிக்கேல் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் மிக்கேல் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பொறியாளா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். தென் மண்டல மாற்றுத்திறனுடையோா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் போ்சில் முன்னிலை வகித்தாா். மிக்கேல் அறக்கட்டளை நிறுவனா் ரூபியா வரவேற்றாா். நீரோடை அறக்கட்டளை நிா்வாகி பாஸ்டா் பால் ஆபிரகாம் ஆரம்ப ஜெபம்
நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மருதுபாண்டியன், தனியாா் வங்கி மேலாளா் குணசேகா், சுகாதார ஆய்வாளா் ஜீவானந்த் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலா் மகாபால் துரை தொகுத்து வழங்கினாா்.
Advertisement
Advertisement
சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க தலைவா் தங்க பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.