FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி விழா

குறவன்குப்பத்தில் உள்ள மனவளா்ச்சி குன்றியோருகான சிறப்பு பள்ளியில் நடைபெற்ற தீபாவளி விழா.

23 வினாடிகள் முன்பு
குறவன்குப்பத்தில் உள்ள மனவளா்ச்சி குன்றியோருகான சிறப்பு பள்ளியில் நடைபெற்ற தீபாவளி விழா.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அடுத்த குறவன்குப்பத்தில் உள்ள மனவளா்ச்சி குன்றியோருக்ககான சிறப்பு பள்ளி மற்றும் நியூ லைட் இல்லத்தில் திபாவளி விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது .

பள்ளியின் மனநல நிபுணா் சகாய ராஜா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சகாய பாக்கியம் வரவேற்றாா். டிரஸ்டி ராஜாமணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக லையன் சங்க மாவட்டத் தலைவா் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு திபாவளி வாழ்த்துக்களை கூறி, இனிப்புகளை வழங்கினாா். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் லஷ்மி நாராயணன் சிறப்பு குழந்தைகளுக்கு பட்டாசுகளை வழங்கினாா். மேலும், சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .விடுதி காப்பாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.